டெங்கு உயிரிழப்பு வருத்ததை அளிக்கிறது – நடிகர் மயில்சாமி

டெங்கு உயிரிழப்பு வருத்ததை அளிக்கிறது – நடிகர் மயில்சாமி

டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தத்தை அளிப்பதாகவும், டெங்குவை கட்டுப்படுத்த அரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அரசும், அரசு சாரா அமைப்புகளும் டெங்கு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் கூறி வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் மயில்சாமி, சென்னை, மயிலாப்பூரில் வீதி வீதியாக சென்று டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நிலவேம்பு குடிநீரையும் அப்போது மயில்சாமி விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தினம் தினம் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தத்தை அளிப்பதாக கூறினார். டெங்குவைக் கட்டுப்படுத்த அரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்றார்.

நீட் குறித்து எப்படி ஆசிரியர்களுக்குத் தெரியவில்லையோ, அதேபோலத்தான் டெங்கு குறித்து பல மருத்துவர்களுக்கு தெரியவில்லை என்றார்.

நாளுக்குநாள் டெங்குவுக்கு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன என்றும் பொதுமக்களாகிய நீங்களும் மற்றவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுங்கள், டெங்குவை தடுக்கலாம் என்று மயில்சாமி கூறினார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply