ஏ சான்றிதழ் பெற்ற ஜீவனின் குதிரை!

ஏ சான்றிதழ் பெற்ற ஜீவனின் குதிரை!

தரமணி, ஹர ஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவன் நடிப்பில் உருவான ஜெயிக்கிற குதிர படத்துக்கு தணிக்கை குழுவினா் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனா்.

நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். இதையடுத்து அவர் திருட்டுப்பயலே, நான்அவனில்லை உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வில்லன் ரோலில் இருந்து ஹீரோவாக உருவெடுத்தார்.

இதையடுத்து நடிகா் ஜீவனுக்கு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பின்னர் அதிபர் என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தற்போது ஜெயிக்கிற குதிர என்ற படத்தில் ஜீவன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவனுடன் டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், தம்பிராமையா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.ஆர்.கவின் சிவா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு “ஏ“ சான்றிதழ் அளித்தனர். இதையடுத்து படத்தை அடுத்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினா் முடிவு செய்துள்ளனா்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply