மீள்குடியேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளிலிருந்து 10,000 அகதிகளை பிரான்ஸுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நேற்று அளித்த பேட்டியில், துருக்கி, ஜோர்டன், நைஜர், சாட் போன்ற நாடுகளிலிருந்து 10,000 அகதிகளை பிரான்ஸில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

இது குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துடன் பிரான்ஸ் அரசு பேசி வருவதாக கூறியுள்ளார்.

இது அடுத்த இரண்டாண்டுகளில் செய்யப்படவுள்ளது. அதே போல ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 50,000 அகதிகளை ஐரோப்பிய நாடுகளில் அடுத்த இரண்டாண்டுகளில் அனுமதிக்க உள்ளோம்.

துருக்கி, மத்திய கிழக்கு நாடுகளின் அகதிகள் இதில் இருந்தாலும், லிபியா, எகிப்து, சூடான் போன்ற நாட்டு மக்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சட்ட விரோத குடியேற்றத்தை இந்த நடவடிக்கையானது தடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடந்த 2015 யூன் முதல் 23,000 பேரை தங்கள் நாட்டில் நுழைய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.