சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதமே இவர்களின் விடுதலையிலும் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

15 வருட காலத்திற்கு மேலாக தமிழ் கைதிகள் வெறுமனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கையின் அரைவாசி காலப்பகுதி விரயமாக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல் இல்லை.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணித் தலைவி தமிழினி எழுதிய நூலை படித்தால் பலவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.