எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு, பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள ஜனாதிபதி, முதல் நிகழ்வாக, புத்தூர் நிலாவறை கமநலசேவை திணைக்களத்தில் நடைபெறும் தேசிய வேலைத் திட்டத்தின் அங்கமாக, விவசாயிகளுக்கு விதைப் பொருட்களை வழங்கவுள்ளார்.

பின்னர், யாழ்.இந்து கல்லூரியில் மூன்று மாடிக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளதுடன், இந்துக் கல்லூரியில் தேநீர் உபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் அங்கு இடம்பெறுவுள்ள தமிழ் மொழித் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதுடன், பிற்பகல் இரண்டு மணிக்கு, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.