விடுதலை புலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்களைப் பார்வையிட்ட அமெரிக்க அதிகாரிகள்!

விடுதலை புலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடிபொருட்களைப் பார்வையிட்ட அமெரிக்க அதிகாரிகள்!

முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் குழுவினர் இன்று பார்வையிட்டனர். குறித்த பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ் நிறுவனத்தினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த பகுதியில் மீட்கப்பட்ட, இலங்கை இராணுவத்திர் மற்றும் விடுதலை புலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான கண்ணி வெடிகள், கைகுண்டுகள், செல்கள் கிளைமோர் குண்டுகள், விடுதலை புலிகளினால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடி பொருட்கள் தொடர்பில் குழுவினருக்கு டாஸ் நிறுவன அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளையும் அவர்கள் நேரடியாக பார்வையிட்டிருந்தனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply