கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தப்பகுதியில் ஏற்கனவே நேற்றையதினம் சொகுசுப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்றையதினம் விபத்திற்குள்ளான பேருந்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்படாத நிலையில் இன்று அதிகாலை குறித்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது…

நேற்றைய தினம் இந்த பகுதியில் நித்திரை காரணத்தால் மோதுண்ட சொகுசு பேருந்து விபத்தில் இருவருக்கு சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கியிருந்த பேருந்து அகற்றப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இதே பகுதியில் இன்று அதிகாலை அகற்றப்படாமல் இருந்த குறித்த பேருந்துடன் மோதுண்டு மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டிருக்காமை காரணமாக ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இரு விபத்துக்கள் இடம்பெற்றதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.