பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவை அழைத்து பேசிய பிரபல இயக்குநர்

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவை அழைத்து பேசிய பிரபல இயக்குநர்

by -
0 8
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நன்கு பிரபலம் ஆகியுள்ளனர்.
இதனையடுத்து போட்டியாளர்களுக்கு விளம்பர  மற்றும் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
Aarav
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவை, இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார். துல்கர் சல்மான், நித்யா  மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ஆரவ் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நடித்துவிட்டு சென்றார்.
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் மணிரத்னம் தன்னை வீட்டிற்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் மணிரத்னம், சுஹாசினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Print Friendly

NO COMMENTS

Leave a Reply