தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனா, தனது திருமண தேதியை திடீர் என்று மாற்றியுள்ளார்.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.பின்னர் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். கன்னட படங்களில் நடித்த போது கன்னட பட அதிபர் நவீன் என்பவரை காதலித்தார். சமீபத்தில் கேரளாவில் பாவனா கடத்தப்பட்டது தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீண்டு வந்த பாவனா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனாவுக்கும், அவரது காதலர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் அக்டோபர் 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது திருமண தேதி திடீர் என்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாவனா- நவீன் திருமணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை பாவனாவே தெரிவித்துள்ளார். ‘சினிமா துறைக்கு ஒருசிலரால் கெட்ட பெயர் வருகிறது. ஆனால் இதுவும் நல்ல தொழில் தான். எனது திருமணத்துக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது. அதற்குள் தயாராவேன். திருமணத்துக்குப் பிறகும் நான் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.