போர்துக்கல்லில் காட்டு தீ : 30கும் மேற்பட்டோர் பலி

2

ஐரோப்பிய நாடு களான ஸ்பெயின், போர்ச்சுக்கல்லில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

இதில், 30 பேர் பலியாயினர். போர்ச்சுக்கல்லின் மத்திய மற்றும் வடக்கு பகுதியின், 26 இடங்களில், தற்போது காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதில், 27 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 17 இடங்களில் சிலர் வைத்த தீயில், காட்டுத் தீ வேகமாக பரவி உள்ளது. இதில், மூன்று பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர்.