அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரண்டாவது மாடியிலிருந்து பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலத்த காயங்களுக்கு மத்தியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அனுராதப்புரத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லீரல் கோளாறு காரணமாக குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சையளிப்பதற்கு குறித்த நபர் ஆரம்பத்தில் மறுத்திருந்த நிலையில் அவரின் மனநிலை குறித்து சோதனை மேற்கொள்ள தீர்மானித்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.