சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய மோப்ப நாய்கள்: தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய மோப்ப நாய்கள்: தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் தாயும், மகனும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 27 வயதுடைய தாயும், 11 வயது மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள் இருவரை அடையாளம் காட்டிய நிலையில், குறித்த இருவரிடமும் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் மூவரும் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இரட்டை கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply