மெர்சல் பாடம் பார்த்து விட்டு வீதியில் நின்றவரின் தலையை மோட்டார்சைக்கிளில் வந்த குழுவினர் போத்தலால் அடித்து சிதைத்துள்ளனர்.

மெர்சல் திரைப்படம் பார்த்துவிட்டு கன்னாதிட்டி வீதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் நின்றுள்ளார்.

அந்த பகுதியால் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் குறித்த இளைஞனுடைய தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

தலை சிதைவடைந்த நிலையில் இளைஞர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஏ.வி. வீதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்தவர் என தெரியவருகிறது.