தோட்ட மக்களுக்கு தெளிவான காணி உறுதிப்பத்திரத்துடன் கூடிய வீடுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த யோசனையை முன் வைத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு வீடமைப்பு திட்டங்கள் மூலம் நிவாரண அடிப்படையில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஹரித ரண் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 551 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமாக மீரியபெந்த வீடமைப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் 75 வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.