இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் முப்பதாவது ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது உயிர் நீத்தவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் நினைவு நாள் இன்று வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பொது மக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபமேத்தி ,மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.