தமிழிசை சவுந்தராஜன் மற்றும் எச்.ராஜா அவர்களால் பிரதமர் மோடியும் பாஜகவும் இந்தியா அளவில் பெரும் நெருக்கடிக்கும் விராசனங்களையும் சந்தித்து வருகின்றனர்.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற காட்சிகளை நீக்குமாறு தமிழிசை ஆரம்பிக்க, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பிற பாஜக தலைவர்கள் அதை வழிமொழிய, இந்த பிரச்சினை இப்போது தேசிய அளவுக்கு போய்விட்டது.

முன்னணி ஆங்கில டிவி சேனல்களும் நேற்று மெர்சல் பற்றிதான் விவாதம் நடத்தின.

MersalvsModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. மோடிக்கு எதிராக மெர்சல் என்பதுதான் இதன் பொருள்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளுக்குதான் இதுபோன்ற ஒரு ஹேஷ்டேக் போடப்படும். ஆனால், தமிழ் திரைப்படம் ஒன்று மோடிக்கு எதிராக பேசுவதாக vs குறியீட்டுடன், தேசிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது இதுதான் முதல் முறை.

பல லட்சம் ரசிகர்களை கொண்டவரும், குழந்தைகள், இளம் பெண்களை கவர்ந்தவருமான தமிழின் முன்னணி நடிகர் ஒருவரே மோடிக்கு எதிராகத்தான் உள்ளார்.

இது தமிழகத்தின் மனநிலையை காட்டுகிறது என்ற செய்தி தேசம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.

பாஜகவுக்கு இனி எல்லா பக்கமும் வேட்டுதான் என்று கூறும் இந்த டிவிட், கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்2 படம்தான் அடுத்த வேட்டு என்பதை போன்ற மீமுடன் வெளியிடப்பட்டுள்ளது.