வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் தாம் யோசனை முன்வைக்கவில்லை என  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசிலமைப்பை உருவாக்கும்போது, இணக்காப்பாட்டுக்கு வரமுடியாத இடங்களில் மாற்று யோசனைகளை தாம் முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையாகும்.

அது மாற்று யோசனையாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறனதொன்று நடப்பதற்கு தமக்குள்ள வாய்ப்பு மிகவும் குறைவானது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஒதுக்கங்கள் மாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒன்பது மாகாணங்களுக்கு உள்ளேயே இலங்கை பிரிக்கப்பட வேண்டும் என தமது யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக இணைப்பு என்ற விடயம் குறித்து தாம் பேசவில்லை என்பதே அதில் அர்த்தப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.