காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற கலவரம் ஏற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் அமைச்சர் கவலை

காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற சிறு சம்பவம் கலவரம் வரையில் வியாபித்தமைக்கு அரசாங்கத்தின் சார்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அப்பிரதேசத்தில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக விசேட பொலிஸ் படையணிகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply