மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கவலை

மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கவலை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, தீர்வை பெற்றுக்கொடுக்கும் பாரிய பொறுப்பு இந்த நல்லாட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி பொறுப்பற்று செயற்படுவதாகவே தோன்றுகின்றது.

எமது உறவுகளை மீட்டுத்தருவதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

மாறாக இழப்பீட்டை வழங்கி எமது வாய்களை அடைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது உயிர்களின் மதிப்பும், எமது கவலைகளும் ஏன் இந்த அரசியல்வாதிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கு தெரியவில்லை” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply