கிளிநொச்சியில் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய ஆசிரியர்?

கிளிநொச்சியில் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய ஆசிரியர்?

கிளிநொச்சி புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் தன்னைக் காதலிக்க மறுத்த மாணவியை கடுமையாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த உயர்தரப் பாடசாலையில் தன்னிடம் கற்கும் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்து வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மாணவி தனியே வீதியால் செல்லும் போது வழி மறித்துள்ளார்.

அப்போதும் தனது காதலை ஆசிரியர் குறித்த மாணவிக்கு தெரியப்படுத்திய போது மாணவி அதுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஆசிரியர் மாணவியைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. மாணவி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய போது குறித்த விடயம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை விசாரணை மேற்கொண்ட கல்விப்பணிமனை குறித்த ஆசிரியரை வேலை இடை நீக்கம் செய்து விசாரணைகளைத் தொடர்கின்றது.

குறித்த ஆசிரியர் தொண்டராசிரியராகக் கடமையாற்றியே பதவிக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Print Friendly

NO COMMENTS

Leave a Reply