சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு மாகாணத்தில் இருந்து கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ஒலிம்பியாட் போட்டிக்காக தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச அளவிலான இந்த போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.