வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் சோலூர் பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  தலைமையாசிரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்து வருவதாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளார்.

ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் ஞானசேகரை சரமாரியாக தாக்கி பள்ளி வகுப்பறைக்குள் சிறைவைத்தனர்.

இதனால் பள்ளியில் உள்ள பொருட்களும் சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் மீரா பெண்காந்தி மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர்  சிறைவைக்கப்பட்டிருந்த தலைமை ஆசிரியரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.