தென்னாபிரிக்காவின் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இலங்கையில் 2015 முதல் 2017 சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களின் சாட்சியங்களை பதிவுசெய்துள்ளது.

இவ்வாறு 71 பேரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐரோப்பியாவில் தற்போதுள்ள தமிழர்களாவர். இவர்கள் அனைவரும் தற்போது ஐரோப்பியாவில் தஞ்சம்கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இவர்கள் உண்மையாக 2015-2017ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சித்திரவதைகளுக்கு உள்ளானார்களா? என்பதை கண்டறிந்து எவ்வாறு உறுதிப்படுத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சூக்கா, சாட்சியமளித்த குறித்த நபர்களில் 12 பேரின் சாட்சியங்கள் வலுவானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கையின் இராணுவம் மறுத்துள்ளது.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உரிய தரவுகள் இருப்பின் விசாரணைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கமும் தெரிவித்துள்ளது.