அணுசக்தியில் இயங்கும், போர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் பணியை இந்தியா ஆரம்பித்துள்ளது.

இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா டில்லியில் நிருபர்களிடம் கலந்துரையாடும் போதே  இதனை தெரிவித்தார். அணுசக்தியில் இயங்கக்கூடிய போருக்கு பயன்படும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் தற்போது சீனா இராணுவத்தின் வலிமை அதிகரித்து வருகின்ற நிலையில் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் நம் நாட்டின் தாக்குதல் திறனை பெரிய அளவில் உயர்த்தும் எனவும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து கூட்டமைப்பை உருவாக்க உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா – பசிபிக் பிராந்தியத்தில் அவசர கால தேவை எழும்போது நம் கடற்படை தயார் நிலையை பிரதிபலிக்கும் வகையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்படும் எனவும் அவர்  கூறினார்.