பிரான்ஸ் செந்தனியில் கடந்த செப்டம்பர் மாதம் யூத குடும்பம் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இவர்கள் இதற்கு முன்னரும் ஆயுதமுனையில்கொள்ளை, ஆட்களை கடத்தி மிரட்டுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் யூத குடும்பத்திடம் ”நீங்கள் யூதர்கள் எனவே உங்களிடம் பணம் இருக்கும் அதை தாருங்கள்” என அடித்து மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொபினி பொலிஸ் நிலையத்தினர் குறித்த ஜவரையும் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளர்.