இந்தியாவில் வருடத்துக்கு 1600 வீரர்கள் பலி!

இந்தியாவில் வருடத்துக்கு 1600 வீரர்கள் பலி!

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் தரைப்படையில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் வீரர்களும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.

சீனா படையெடுப்பு பாகிஸ்தானுடனான போருக்குப்பின் இறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது. அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

சாலை, விமானம், கப்பல் விபத்துக்கள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.

இதுதவிர காஷ்மீர் எல்லைக்கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெறும் சண்டை மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகளுடன் ஏற்படும் மோதலிலும் உயிரழக்கின்றனர்.

விபத்துக்களில் 350 வீரர்களும், தற்கொலை மூலம் 120 பேரும் பலியாகின்றனர்.

இந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொ லைகள் நடைபெறுகின்றன.

இதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது.

உடல் ரீதியாக ஏற்படும் காயங்களால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. அது போர்க்காலங்களில் ஏற்படும் உயிரிழப்பை விட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1480 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லை தாண்டும் தீவிரவாதிகளுடன் மோதல், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதல் உள்ளிட்ட பலத்த காயங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக 1947-48-ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரை மீட்க போர் நடந்தது. அதில் 1,104 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 1962-ல் நடந்த சீன போரில் 3,250 பேரும், 1965-ல் நடந்த பாகிஸ்தான் போரில் 3,264 பேரும் பலியாகினர்.

1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைக்காக நடந்த போரில் 3,843 பேரும், 1987-ல் இலங்கை சென்ற அமைதிப்படை வீரர்கள் விடுதலைப்புலிகளுடன் நடத்திய சண்டையில் 1,17 பேரும், இறுதியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் 522 பேரும் வீர மரணம் அடைந்தனர்.

 

Print Friendly

NO COMMENTS

Leave a Reply