இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடர்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடர்

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் அடங்கிய இந்த குழாமிற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த குழாமின் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி , உபுல் தரங்க, தனுஸ்க குணதிலக , லஹிரு திரிமான்ன , ஏஞ்சலோ மெத்திவ்ஸ் , அசேல குணரத்ன , நிரோஷன் திக்வெல்ல , சதுரங்க த சில்வா மற்றும் அகில தனஞ்சய இந்த குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுரங்க லக்மால் , நுவன் பிரதீப் , சதீர சமரவிக்ரம , தனஞ்சய த சில்வா , துஷ்மந்த சமீர , சசித் பதிரண மற்றும் குசல் ஜனித் பெரேரா குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஏனைய வீரர்களாவர்.

ஒருநாள் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணி இன்று இரவு இந்தியா நோக்கி செல்லவுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply