சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர் கசிந்தது!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர் கசிந்தது!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனை வைத்து பேமிலி என்டர்டெயின்மென்ட் படங்களை எடுத்தவர் இயக்குனர் பொன்ராம். தற்போது, தனது மூன்றாவது படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்தே இயக்கி வருகிறார் பொன்ராம். இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே இரண்டு படங்கள் ஹிட் அடித்ததால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். ஆர்.டி.ராஜா இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார்.
பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் பெயர் தற்போது கசிந்துள்ளது. இப்படத்திற்கு ‘சீமராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Print Friendly

NO COMMENTS

Leave a Reply