தெற்கு அதிவேக வீதியில் இன்று (06/12/2017) காலை பாரவூர்தி ஒன்று பாதை வேலியில் மோதியுள்ளது. இதன் காரணமாக மாத்தறையிலிருந்து வரும் வாகனங்கள் கொக்மாதுவவிலிருந்து இமதுவ வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து பாரவூர்தி வாகனம் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் சாரதி துாக்க கலக்கத்தில் இருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.