மனைவியை தீ வைத்துக் கொலை செய்தவருக்கு கடுழியச் சிறை!

மனைவியை தீ வைத்துக் கொலை செய்தவருக்கு கடுழியச் சிறை!

வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விளக்கம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ,எதிரி கைமோசக்கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது. அந்தக் குற்றத்துக்காக எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபா தண்டம் பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply