சில அத்தியாவசிய பொருட்களுக்கு சில்லறை விலை நிர்ணயிப்பு!

சில அத்தியாவசிய பொருட்களுக்கு சில்லறை விலை நிர்ணயிப்பு!

சில அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

தலைவர் ஹசித திலக்கரத்னவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகிய பொருட்களுக்கு இவ்வாறு அதிகபட்ச சில்லறை நிர்ணயிக்கப்படவுள்ளது.

தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 130 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

இதனுடன் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

இந்த உணவு பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வாழ்க்கை செலவு குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இந்த விலை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply