இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை இரு நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த பின்னா்  தீவைத்து எரித்துள்ளனர்.

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில்  8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த வேளை  இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மண்ணெண்ணை  ஊற்றி  எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சிறுமியின் அலறல் சத்தம்  கேட்ட அயலவர் சிறுமியை மீட்டு பண்டல்கண்ட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 வயதிற்கு  குறைவான வயதுள்ள சிறுமிகளை  பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க உரிமை உண்டு என்னும் மசோதா மத்திய பிரதேச சட்ட சபையில்  கடந்த திங்கட்கிழமை  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . இந்த மசோதா  நிறைவேற்றப்பட்டு ஒரு வாரத்தில்  மத்திய பிரதேசத்தில்  இது போன்ற சம்பவம் நடப்பது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்  டெபுலூர் தெஹில்  மாவட்டத்தின் சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.