ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்காதது ஏன்? – பிரான்சிஸ் ஹரிசன்

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்காதது ஏன்? – பிரான்சிஸ் ஹரிசன்

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அறிந்திருந்தும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் பிரித்தானிய ஊடகவியலாளரான பிரான்சிஸ் ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இசைப்பிரியாவை இலங்கை இராணுவமே கொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவேற்றியுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மதிப்பிற்குரிய அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே! ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இருந்தால், அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போதும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே.

ஐக்கிய நாடுகள் சபை கூட இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் தான் கொன்றுவிட்டது என்று கூறுகிறது” என பிரான்சிஸ் ஹரன்சின் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply