இலங்கை அணி வீரர் மெதிவ்ஸ் மீண்டும் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின் 12ஆவது ஓவரில் தனது 3ஆவது ஓவரை விசிக்கொண்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பின்தொடை பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியில் ஓய்வறைக்குத் திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் துடுப்பெடுத்தாடவும் வராத நிலையில் இந்தூரில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை 88 ஓட்டங்களால் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து விலகி இருப்பார் என உடற்பயிற்சி நிபுணர் நிர்மலன் தனபாலசிங்கம் குறிப்பிட்டதாக இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க குறிப்பிட்டுள்ளார்.மெதிவ்ஸ் தொடைப் பிடிப்பு,கெண்டைக் கால் மற்றும் கணுக்கால் காயங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.