பர்மிங்ஹாமில் 2022இல் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்குப் பதிலாக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொமன்வெல்த் போட்டி விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் போட்டியை நடத்தும் நாடு 7 போட்டிகளை பரிந்துரை செய்யலாம் எனவும் அதனடிப்படையில் ஆண்கள்,பெண்கள் இணைந்து விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஏற்கப்பட்டால் கொமன்வெல்த் போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.