2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுடன் இடம்பெற்ற 20க்கு இருபது போட்டிகளின் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை.

அத்துடன் நடைபெற உள்ள பங்களாதேஷுடனான தொடருக்கும் லசித் மலிங்க அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

34 வயதுடைய இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 204 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 301 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.