தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யா­க­வும், பல­மா­க­வும் செயற்­ப­ட ­வேண்­டும் என்று மன்­னார் மாவட்­டத்­தின் புதிய ஆய­ரா­கப் பத­வி­யேற்ற பேரருட் கலா­நிதி லய­னல் இம்­மா­னு­வேல் பெனாண்டோ தெரி­வித்­தார் .

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிர­தி­ நி­தி­க­ளுக்­கும், மன்­னா­ரின் புதிய ஆய­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று மாலை 5.30 மணிக்கு மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நடை­பெற்­றது. அதன்போதே மன்­னார் ஆயர் இவ்­வாறு கூறி­னார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன், த.சித்­தார்த்­தன், செல்­வம் அடைக்­க­ல­நா­தன், சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் மற்­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பிறி­முஸ் சிராய்வா ஆகி­யோர் இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­கொண்­ட­னர்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி, இடைக்­கால அறிக்கை என்­பன தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆய­ருக்கு எடுத்­துக் கூறி­னார்.

சம­கால அர­சி­யல் விட­யங்­கள் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. தமிழ் அர­சி­யல் தொடர்­பில் ஊட­கங்­க­ளின் ஊடா­கவே இது­வரை அறிந்து வைத்­துள்­ளேன் என்று ஆயர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இது­வரை நான்கு கட்­சி­கள் செயற்­பட்டு வந்த நிலை­யில் தற்­போது மூன்று கட்­சி­கள் இணைந்தே தேர்­தலை எதிர்­கொள்­வது தொடர்­பி­லும் ஆய­ருக்கு எடுத்­துக் கூறப்­பட்­டுள்­ளது. ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டும். அதுவே பல­மாக இருக்­கும் என்று ஆயர் குறிப்­பிட்­டுள்­ளார்.