எகிப்தில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட 4 தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2015-ல் காப் எல் ஷேக் நகரில் உள்ள ஒரு விளையாட்டரங்கத்துக்கு வெளியே ஒரு ராணுவ பஸ் நின்று கொண்டிருந்தது. ராணுவ பயிற்சி பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த அந்த பஸ் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், பஸ்ஸில் இருந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த ராணுவ தீர்ப்பாயம், 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, அலெக்சாண்ட்ரியா நகரில் உள்ள சிறை வளாகத்தில் அந்த 4 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எகிப்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2013-ல் ராணுவ சோதனை சாவடி மீது நடந்த தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு டிசம்பர் 26-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.