சாம்சங் : ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கிற போதிலும், வாடிக்கையாளர்களின் பெறுமதிப்பினையும், அவர்களின் ஆதரவினையும் பெற்றுள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் சாம்சங் என்றால் அது மிகையில்லை.

அத்தகைய சாம்சங் நிறுவனம், தற்போது புதிய தயாரிப்பான சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போனை இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் ஏ 8+ ஆகும். சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்

அம்சங்கள் :

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போனை ஆனது, 6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆக்டா கோர் ப்ரோஸசர், 4ஜிபி ரேம் – 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் – 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 3500mAh திறனுள்ள பேட்டரி, 16 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வெளிவரவுள்ளது.

விலை :

சாம்சங் ஏ 8+ ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 38,040 க்கு விற்பனை செய்யப்படக்கூடுமென செய்திகள் வெளியாகியுள்ளது.