உலகின் சில பகுதிகளில், மிகவும் குறைந்த அலைவரிசை கொண்ட ஓர் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதுதான், ஹம் என குறிப்பிடப்படும், 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி.

நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை. இந்த விநோத ஒலி கனடா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, நியூமெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிலருக்கு மட்டும் கேட்கிறது. உலக மொத்த மக்கள்தொகையில் 2 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த ஒலி கேட்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் இந்த மீ ஒலி இரைச்சல், 30 முதல் 80Hz குள் என மதிப்பிடப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்பது விநோதம். அறிவியலாலும் இந்த புதிருக்கு விடை அளிக்க முடியவில்லை. இருப்பினும் பலவிதமான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • பூமிக்கு அடியில் கால்வாய் அமைக்கும் பணியின் ஒலி.
  • மீன்கள் உறவுகொள்வதன் ஒலி.
  • பூகம்பத்தின் அதிர்வு.
  • மலை இடுக்குப் பள்ளத்தாக்குகளில் விபத்துகுள்ளான வேற்றுகிரக வாகனத்தின் சப்தம்
  • இராணுவ இரகசிய கருவிகளால் ஏற்பட்ட ஒலி
  • அதிர்வெண் சோதனை.
  • எரிமலை சீற்றத்தின் அறிகுறி.
  • நிலத்தினடியில் நகர்ந்த தட்டுகளின் ஓசை
  • தூரத்து இடி முழக்கம்.
  • எங்கேயோ இருக்கும் இயந்திரம் அணைக்கப்படும் ஓசை.

என்று சந்தேகிக்கப்பட்டன. ஆனால், நெடுஞ்சாலை வாகனங்களோ, தொழிற்சாலை உபகரணங்களோ இதற்குக் காரணம் அல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த ஒலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதுதான் பிரச்னை. அது மட்டுமல்ல, அந்த ஒலி எல்லோருக்கும் கேட்காமல் சிலருக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதுதான் அதைவிட பெரிய பிரச்சினை. ஒலியைக் கேட்பவர்களுக்கு இது எங்கிருந்து வருகிறது என்பது தெரிவதில்லை.

இந்த ஒலியால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், இரவு தூங்கும்போது படுக்கையில் தொடங்கி வீடு முழுவதும் அதிர்வதுபோல இந்த ஒலி கேட்பதாகக் கூறியிருக்கிறார். அவரைத் தவிர மற்றவர்கள், அப்படி ஓர் ஒலியே கேட்கவில்லையே எனக் கூறுவதுதான் அவருக்கு ஆச்சரியமளித்துள்ளது.

நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை. நம் உடலின் மேல் தோல், ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது. இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. இருப்பினும்,இது தொடர்பில், உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்று, நியூரோபோன் ஆராய்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு தரப்பினர் இந்த ஒலி உண்மையில் இல்லவே இல்லை, எல்லாம் உளவியல் தாக்கம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், இந்த ஒலி, செவியின் கேட்கும் திறன் சார்ந்த கோளாறு என்கின்றனர். இராணுவம் பயன்படுத்தும் குறைந்த அலைவரிசை உபகரகணங்களின் தாக்கமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படிப் பலவிதமான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்னமும் உறுதியான காரணம் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.