ஷென்ஸென் டென்னிஸ் இறுதிப்போட்டி ஒற்றையர் பிரிவில் சைமோனா ஹெலப் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதனடிப்படையில் சீனாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஷென்ஸென் திறந்த மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில்  உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியா நாட்டின் சைமோனா ஹேலப் மற்றும் உலகின் 6 ஆம் நிலை வீராங்கனையான செக் குடடியரசு நாட்டின் கேத்தரினா சினியாகோவா ஆகியோர் மோதியுள்ளனர்.

இந்நிலையில் நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் 6 ற்கு 1 ரீதியில் வெற்றிபெற்ற சைமோனா இரண்டாவது சுற்றில் 2 ற்கு 6 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார். இதனடிப்படையில் நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் இறுதிச்சுற்றில் 6 ற்கு 0 என்ற ரீதியில் உலகின் 6 ஆம் நிலை வீராங்கனையான செக் குடடியரசு நாட்டின் கேத்தரினா சினியாகோவாவை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியா நாட்டின் சைமோனா ஹேலப் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.