இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து, தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார். குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதன்படி நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டெயின், குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் இடைநடுவில் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெயின் ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதால் இந்தியாவிற்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த போட்டியின் போது, அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஸ்டெயின் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.