இராஜகிரிய புதிய மேம்பாலம், இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கபபட்டது. ஜனவரி 8 புரட்சிக்கு வழி வகுத்த காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரை இப்பாலத்திற்கு சூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

14 raja-pm-1021x563

ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, இராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள், கடந்த வருடம் ஏப்ரல் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 32 மாதங்களில், இதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது, ஆனால் 20 மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் பாலத்தை தற்போதைய அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. இதற்காக 4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனையின் பேரில், ஸ்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி கடந்த 3 வருடத்தில் அரசாங்கம் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் மறறொரு விசேட திட்டமாக இதனை கருதலாமென தெரிவித்தார். ஜனநாயகம், சுதந்திரம், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மட்டுமல்லாமல் ஊடக சுதந்திரமும் மறுக்கப்பட்டு வந்த ஒரு காலப்பகுதியில் புதியதொரு பயணத்தை மேற்கொள்வதற்காக மக்கள் தம்மை நாட்டின் தலைவராக தெரிவு செய்ததாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்,

ஜனவரி 8 ஆம் திகதி எமது அரசியல் வரலாற்றில் மிகவும் விசேடமான தினமாகும். அதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் இன்றைய தினத்தில் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரை வரவேற்கின்றேன். அவர் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சிக்கு தலைமைதாங்கிய முக்கிய தலைவராவார். கடந்த சில நாட்களாக அநேகமானோர் இப்பாலத்திற்கு மாதுலுவாவே சோப்பிதத தேரரின் பெயரை சூட்டுமாறு கூறினார்கள். ஆகவே இம் மேம்பாலத்திற்கு மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரை சூட்டுவது பொருத்தமானதென நான் ஆலோசனையொன்றை மு:ன்வைக்கின்றேன். அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்வார்கள் என கருதுகின்றேன். கடந்த 3 வருடங்களில் நாட்டை முன்னெடுப்பதற்கு தடையாகவிருந்த தடைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் நிலவும் பிரச்சினையை தீர்ப்பதற்கு அங்கு நிலவும் சாதகமற்ற சூழ்நிலையை சாதகமாக மாற்றிக் கொள்வதை போல் நாடு எதிர்கொண்;ட பிரச்சினைகளையும் சவால்களையும் முறியடிப்பதற்கு சர்வதேசத்தை வெற்றி கொள்ள வேண்டிய தேவை எமக்கிருந்தது, தற்போது அனைத்து தரப்பும் எமக்கு உதவுகின்றன. 3 வருட குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றபபட்டுள்ளது. பல்வேறு அபிவிருத்தி திட்;டங்கள் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் இத்திட்டமானது குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட திட்டமாகும். ஆகவே அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எமக்கு உதவி செய்த ஸ்பெயின் அரசாங்கம் ஆகியோருக்கு கௌரவமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடனும் நட்புடனும நமது நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய அவர்,

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் தலைமையை ஏற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய தொழிற்சாலைகள், சுறறுலா துறை அபிவிருத்தி, சேவை துறைகள் மு:ன்னேற்றம், கடற்றொழில் மற்றும் விவசாய துறை என்பன நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செய்வதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தேவை. கடந்த 2 வருடங்களில் நாங்கள் திட்டமிட்ட ரீதியில் இவ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பிரதான அம்சமாக இம் மேம்பாலத்தை நான் கருதுகின்றேன். நல்லாட்சி அரசாஙகம் ஆட்சியமைத்ததன் பின்னர் கிடைத்த ஜிஎஸ்பி பிளஸ் நிவாரணங்களின் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வருமானத்தையும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என தெரிவித்தார்.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தன் பின்னர் ஸ்பெயின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியை மதிப்பீடு செய்து எமது அமைச்சின் செயலாளரினால் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அவ் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நாங்கள் அதில் சாதகமான விடயங்களை உள்வாங்கினோம். அதன் மூலமே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை இறுதி வரை முன்னெடுப்பதற்கு எமது ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி ராஜகிரிய மேம்பால நிர்மாண பணிகள் சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி அவர்களே நாங்கள் இப்பாலத்தை நிர்மாண பணிகளை உரிய முறையில் மேற்கொண்டதுடன் காணிகளையும் உரிய முறையில் பெற்றுக் கொண்டோம். இத்திட்டம் முடிவடைவதற்கு 11 மாதங்கள் இருக்கும் போது நாங்கள் நிர்மாண பணிகளை முடித்துள்ளோம் என குறிப்பிட்டார்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்தன, மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உட்பட பலர் இவவைபவத்தில் கலந்து கொண்டனர். இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலத்தின் நீளம் 533 மீட்டராகும். அத்துடன் 4 வழித்தடங்கலை கொண்டதாக இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 180 மீட்டர் நீளமான பிரவேச பாதையுடனும் அதற்கு சமாந்தரமாக இரண்டு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இராஜகிரிய மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர், இப்பகுதியில் வாகனங்களின் வேகம் மணிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்திலே காணப்பட்டது. ஆனால் அதனை தற்போது மணிக்கு 20 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க முடிந்துள்ளது. நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலத்தின் 5லம், பொல்துவ சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரை காணப்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

vlcsnap-2018-01-08-19h02m32s310-e1515419813207