உள்ளுராட்சிமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போஸ்டர் பெனர் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வாகனம் செலுத்தியமை, ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பயன்படுத்தியமை தேர்தல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டமை மற்றும் வைத்திருந்தமை சட்டவிரோத பேரணிகள் நடத்துதல் ஆகியன தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இவ்வாறான காரணங்களினாலேயே மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்க எதிராக அதிரடி நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.