கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன .

பன்முன்ஜோமில் ‘சமாதான கிராமம்’ என அழைக்கப்படும் பகுதியில் உள்ள ‘அமைதி மாளிகையில்’ இந்த சந்திப்பு நடக்கிறது.

_99517178_3541aec3-7b1f-479e-9e37-b37e89c1560a

பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள 2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும்.

இரு கொரிய நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேச உள்ளதாகத் தென் கொரியா கூறியுள்ளது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்அளவு பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.