வவுனியா – மஹரம்பகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரு சடங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தனது கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.