காட்டு யானைத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி ..!

காட்டு யானைத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி ..!

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஆயித்திய மலைப் பொலிஸ் பிரிவின் உன்னிச்சை – கார்மலைப் பகுதியில் இன்று(11.01.2018) அதிகாலை 5 மணியளவில் காட்டு யானைத் தாக்குதலினால் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதுடைய, மாலையர் சின்னத்தம்பி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply