யாழ்ப்பாணம் மிருசுவில் புகையிரத நிலையத்தில் இன்றுகாலை 7:00 மணியளவில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் 06 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்

புகையிரத நிலையத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கொடிகாமம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், குறித்த பகுதியில் 6 கிலோ நிறையுடைய கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் இன்று சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.