வீதி விபத்தில் படுகாயமடைந்த மாணவன் ஒருவன் இரண்டரை மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று(16) யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் மத்தியை சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிவானந்தன் மதுசன் (வயது 18) என்ற மாணவனே மேற்படி உயிரிழந்துள்ளான்.

வீதி விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று(17) அதிகாலை குறித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.