முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம் தேடும் நடவடிக்கை மீண்டும் இன்று(6) இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து தற்போது அகழ்வுப்பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

Image result for முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம் தேடும் நடவடிக்கை

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படை கடற்படை ஆகியோர் இணைந்து இந்த அகழ்வுப்பணியினை முன்னெடுக்கின்றனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படை கடற்படை ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 17 ம் திகதி மாலை அகழ்வுப்பணி இடம்பெற்றது.

சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இப்பணி நடைபெற்றது. தொடர்ந்து அகழ்வு பணிக்கான இயந்திரத்தின் அளவு போதாமையினால் பெரிய ரக ஜே.சி.பி இயந்திரத்தை ஒழுங்கு செய்துவிட்டு வருமாறு நீதிபதி பணித்ததோடு தோண்டப்பட்ட இடம் மீண்டும் மூடப்பட்டு பிறிதொரு தினத்தில் இந்த அகழ்வு பணி தொடரவுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று(06) காலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.